ஆப்நகரம்

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி பரிசு.. இளவரசர் வில்லியம் அறிவிப்பு!

இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான கெய்தி நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய் பரிசு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Dec 2022, 5:00 pm
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்த்தெடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோக, விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கி, வருமானத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil Kheyti
Kheyti


இந்நிலையில், விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்தக்கூடிய இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த அறிவிப்பை வேல்ஸ் இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான கெய்தி (Kheyti) விவசாயம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் விவசாயிகள் செலவுகளை குறைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தை குறிவைத்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கெய்தி நிறுவனத்துக்கு The Earthshot Prize பரிசும் 10 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை இங்கிலாந்தில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ளார்.

Home Loan பணத்தை நிறைய சேமிக்கலாம்.. இந்த ஆஃபரை விட்றாதிங்க!
கெய்தி நிறுவனம் உள்பட ஐந்து வெற்றியாளர்களுக்கு 1 மில்லியன் பவுண்ட் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 மில்லியன் பவுண்ட் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 10 கோடி ரூபாய் ஆகும். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு நல்ல திட்டங்களை கொண்டுவருவோருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இயற்கை, காற்று, கடல், கழிவில்லா உலகம், காலநிலை மாற்றம் ஆகிய ஐந்து விஷயங்கள் தொடர்பாக பணி செய்வோருக்கு ஆண்டுதோறும் ஐந்து பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கு, இயற்கை பிரிவின் கீழ் கெய்தி நிறுவனத்துக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கெய்தி நிறுவனம் சிறு விவசாயிகள் தங்கள் செலவுகளை குறைத்து, உற்பத்தியை உயர்த்தி, வேளாண் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உதவுகிறது. இந்தியாவில் சுமார் 10 கோடி சிறு விவசாயிகள் இருக்கின்றனர். இவர்கள் காலநிலை மாற்றம், வெப்ப அலை, பூச்சிகள், பருவம் தவறிய மழை போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.

சிறு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க, சுற்றுசூழலுக்கு உகந்த தீர்வுகளை கொண்டுவந்துள்ளது கெய்தி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் விவசாயிகளுக்கு பயிற்சியும் வழங்குகிறது. வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, விவசாயத்தில் அதிகம் முதலீடு செய்வது ஆகியவற்றுக்கு கெய்தி நிறுவனம் தீர்வுகளை கொண்டுவந்துள்ளது. இதை பாராட்டி 10 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்