ஆப்நகரம்

Hyundai cars: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. போட்டுத்தாக்கிய ஹுண்டாய்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை முந்தி ஹுண்டாய் நிறுவனம் மீண்டும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Samayam Tamil 3 Jul 2022, 2:16 pm
இந்திய கார் மார்க்கெட்டில் மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் இருந்து வருகின்றன. அதிக கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுசுகி முதலிடத்திலும், ஹுண்டாய் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து நீடித்து வந்தன.
Samayam Tamil hyundai


ஆனால், அண்மைக்காலமாக டாடா மோட்டார்ஸ் அதிக கார்களை விற்று அதிவேகத்தில் மார்க்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. கடந்த ஏழு மாதங்களாக ஹுண்டாய் நிறுவனத்தை விட அதிக கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

இதனால் ஹுண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனம் என்ற இடத்துக்கு டாடா மோட்டார்ஸ் முன்னேறியது. இந்நிலையில், ஏழு மாதங்களுக்கு பின் ஜூன் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை முந்தி மீண்டும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ஹுண்டாய்.

TCS: சிறு நகரங்களில் டிசிஎஸ் அலுவலகம்.. ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
ஜூன் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை காட்டிலும் ஹுண்டாய் நிறுவனம் கூடுதலாக 4000 கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது, ஜூன் மாதம் ஹுண்டாய் நிறுவனம் மொத்தம் 49,001 கார்களை விற்பனை செய்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45,197 கார்களை விற்பனை செய்துள்ளது.

வரும் நாட்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும், ஹுண்டாய் நிறுவனத்துக்கும் இடையே போட்டி கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், முதலிடத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஜூன் மாதம் மாருதி சுசுகி நிறுவனம் 122,685 கார்களை விற்பனை செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்