ஆப்நகரம்

ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சாருக்கு அபராதமா?

நடந்து கொண்டிருக்கும் விசாரணையில் ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு செபி ரூ. 25 கோடி அபராதம் விதிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Jun 2018, 5:09 pm
நடந்து கொண்டிருக்கும் விசாரணையில் ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு செபி ரூ. 25 கோடி அபராதம் விதிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார்
ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார்


ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வரும் நூபவர் ரெனியூவபிள்ஸ் நிறுவனத்தில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ரூ. 64 கோடி முதலீடு செய்ததாகவும், இதற்கு பிரதிபலனாக கடன் கேட்டு வந்த வேணுகோபாலுக்கு சந்தா கோச்சார் விதிமுறைகளை மீறி ரூ. 3,250 கோடி கடன் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து செபிக்கும் தெரிவிக்கவில்லை என்ற கூறப்படுகிறது.

துவக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டை ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் மறுத்து வந்தது. இந்த நிலையில், செபி கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தா கோச்சாருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து, விசாரணை நடத்த முன் வருவதாக ஐசிஐசிஐ அறிவித்தது.

இந்த விசாரணையில் சந்தா கோச்சார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது செபி நிறுவனம் ரூ. 25 கோடி அபராதம் விதிக்கும். அதுவும் செபி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், சந்தா கோச்சாரை பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் தெரிய வந்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத, செபி அதிகாரிகள் இருவர் கூறுகையில், ‘’தற்போதைய நோட்டீசின்படி சந்தா கோச்சார் மீது நிதி அடிப்படையிலான அபராதம் மட்டுமே விதிக்க முடியும். ஆனால், அவரை பதவியை விட்டு இறங்குமாறு கூற முடியாது’’ என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்