ஆப்நகரம்

இனி வங்கிக்கு அலைய வேணாம்: வாட்சப்பில் எல்லாம் வந்தாச்சு!

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு வாட்சப் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Oct 2020, 4:11 pm

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் வங்கிகளில் கூட்டம் கூடுவது மிக ஆபத்தானது. எனவே, வங்கிச் சேவைகளை எவ்வளவு எளிமைப்படுத்த முடியுமோ அவ்வளவு முயற்சிகளை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.
Samayam Tamil Whatsapp


ஏற்கெனவே நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யூபிஐ, வீட்டுக்கே நேரடி வங்கிச் சேவைகள் என பல டிஜிட்டல் யுக வங்கி சேவைகளை இந்தியாவின் பல முன்னணி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில், மொபைலில் வாட்சப்பிலேயே வங்கிச் சேவைகளை பயன்படுத்த ஐசிஐசிஐ வங்கி வழிவகை செய்துள்ளது. இதன்படி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி வாட்சப் மூலமகாவே ஃபிக்ஸட் டெபாசிட், பில் கட்டணம், பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்தலாம்.

800 ரூபாய் போதும்: கார் உங்களுக்குதான்!

மின் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர் கட்டணம், மொபைல் ரீச்சார்ஜ் போன்றவற்றையும் வாட்சப் மூலம் உடனடியாக செலுத்திவிட முடியும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கஸ்டமர் ஐடி, இறக்குமதி ஏற்றுமதி கோடு, கடன் வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வாட்சப் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இப்புதிய வாட்சப் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் உடனடியாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு, ஐசிஐசிஐ வங்கியின் வாட்சப் எண்ணை (86400 86400) மொபைலில் சேவ் செய்துவைத்துக்கொள்ள வேண்டும்.

வாட்சப்பில் ‘Hi' என செய்தி அனுப்பினால் உங்களுக்கு சேவை லிஸ்ட் வரும். அதில் இருந்து உங்களுக்கு தேவையான சேவையை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்