ஆப்நகரம்

பணம் அனுப்பினால் அதிகக் கட்டணம்: ஐசிஐசிஐ அதிரடி அறிவிப்பு!!

ஆகஸ்ட் மாதம் முதல் பணப் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்துவதாக ஐசிஐசிஐ பேங்க் அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 Jul 2021, 11:15 am
நீங்கள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு. அடுத்த மாதம் முதல் பரிவர்த்தனைக் கட்டணங்கள் மாறவிருக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பை ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய பரிவர்த்தனைக் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
Samayam Tamil icici


பணம் எடுப்பது மற்றும் பணம் டெபாசிட் செய்வது என அனைத்து வகையான பணப் பரிவர்த்தனைகளுக்கும் இரு மாதத்தில் 4 முறை மட்டுமே இலவசமாகப் பரிவர்த்தனை செய்ய முடியும். அதைத் தாண்டினால் பரிவர்த்தனை ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

மதிப்பு அடிப்படையில், வங்கிக் கணக்கு உள்ள கிளையில் பணப் பரிவர்த்தனை செய்தால் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதைத் தாண்டும்போது 1000 ரூபாய்க்கு ரூ.5 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு ரூ.2,000: இந்தத் தேதியில் வருது!
மற்ற கிளைகளில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு அதிகபட்ச வரம்பு நாள் ஒன்றுக்கு ரூ.25,000. அதைத் தாண்டினால் 1000 ரூபாய்கு 5 ரூபாய் கட்டணம்.

மூன்றாம் தரப்பு மூலமாக பரிவர்த்தனை செய்யும்போது நாள் ஒன்றுக்கு ரூ.25,000. அதைத் தாண்டி அனுமதிக்கப்படாது.

மூத்த குடிமக்களுக்கு நாள் இன்றுக்கு ரூ.25,000 என்ற வரம்பு இருக்கும். ஆனால் அதிக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்