ஆப்நகரம்

Bharat Bond ETF: ஏன் முதலீடு செய்ய வேண்டும்.. ஐந்து காரணங்கள்!

பாரத் பாண்ட் ETFல் முதலீடு செய்ய ஐந்து முக்கிய காரணங்கள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Dec 2022, 12:59 pm
2019ஆம் ஆண்டில் பாரத் பாண்ட் ETF அறிமுகப்படுத்தப்பட்டது அப்போது முதல் பாரத் பாண்ட் ETF (Bharat Bond ETF) ஏற்கெனவே மூன்று தொகுப்புகளாக மத்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி பாரத் பாண்ட் ETF நான்காம் தொகுப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Bharat Bond ETF
Bharat Bond ETF


இந்த பாரத் பாண்ட் ETF தொகுப்பு 2033ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதிர்வடைகிறது. Edelweiss AMC நிறுவனம் இந்த பாரத் பாண்ட் ETFஐ நிர்வகிக்கிறது. பாரத் பாண்ட் ETF சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நம்பகத்தன்மை, குறைவான வரி ஆகிய சூப்பரான பலன்கள் பாரத் பாண்ட் ETF முதலீட்டில் உள்ளது.

பாரத் பாண்ட் ETF நான்காம் தொகுப்பு வாயிலாக 1000 கோடி ரூபாயை திரட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொகை மத்திய அரசால் பொதுத் துறை நிறுவனங்களுக்காக செலவிடப்படும். மேலும் மற்ற மூலதனச் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும்.

வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு.. அபராதமும் கட்டாயம் செலுத்தனும்!
பாரத் பண்ட் ETFஇல் முதலீடு செய்வதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் இருப்பதாக ICICI Direct நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.

  • அதிக லாபம்: மொத்த வருமானம் 7.5%, வரி போக நிகர வருமானம் 6.9%

  • நிலைத்தன்மை, பாதுகாப்பு: குறைவான ரிஸ்க் மட்டுமல்லாமல் நிலையான வருமானம் தரக்கூடிய ETF.

  • Liquidity: எப்போது வேண்டுமானாலும் பங்குச் சந்தையில் பாரத் பாண்ட் ETFஐ விற்பனை செய்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இந்த வசதி ஒரு கூடுதல் சிறப்பு. அதேபோல எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.

  • குறைவான வரி: பாரத் பாண்ட் ETFக்கு மிக குறைவான வரியே விதிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணங்கம் நீங்கலாக 20% வரி விதிக்கப்படுகிறது. இண்டெக்ஸ் பலனும் உள்ளது.

  • செலவும் குறைவு: பாரத் பாண்ட் ETFக்கான செலவும் மிக குறைவும். பாரத் பாண்ட் ETFன் செலவு விகிதம் (Expense ratio) வெறும் 0.0005% மட்டுமே.

மெச்சூரிட்டி:

2019ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் ஐந்து தொகுப்புகளாக பாரத் பாண்ட் ETF வெளியாகியுள்ளது. இவை முறையாக 2023, 2025, 2030, 2031, 2032 ஆகிய ஆண்டுகளில் முதிர்வை அடைகின்றன.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்