ஆப்நகரம்

பொருளாதார வளர்ச்சியில் முன்னேறும் இந்தியா!

நடப்பு நிதியாண்டில் இந்தியா 9 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Sep 2021, 11:05 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் துறை உற்பத்தி, ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதனால் இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பிய சூழலில் இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil icra


2020-21 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 0.4 சதவீதம் வளர்ச்சி கண்டு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை வீசியதால் சற்று பின்னடைவு ஏற்பட்டது. எனினும், அரசின் நடவடிக்கைகளாலும் கொரோனா தடுப்பூசித் திட்டத்தாலும் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கத் தொடங்கியுள்ளது. ஆய்வு நிறுவனங்களில் பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.

பொருளாதார வளர்ச்சி... குறையும் நம்பிக்கை!
மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நடப்பு 2021-22 நிதியாண்டில் இந்தியா 9 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 8.5 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று கூறியிருந்தது. கொரோனா தடுப்பூசித் திட்டம், காரிஃப் பயிர் அறுவடை போன்ற காரணிகளால் இந்த வளர்ச்சி சாத்தியமாகும் என்று இக்ரா நிறுவனம் கூறியுள்ளது. எனினும் கொரோனா மூன்றாம் அலை வீசும்பட்சத்தில் பொருளாதார வளர்ச்சியில் முட்டுக்கட்டை விழ வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்