ஆப்நகரம்

விலைவாசி உயர்வால் தலைவலி.. மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்!

விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்.

Samayam Tamil 25 May 2022, 7:00 pm
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முதலில் நடவடிக்கை எடுத்தது.
Samayam Tamil cash


இம்மாதம் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்தி ரெப்போ வட்டியை 4.40% ஆக உயர்த்தியது. ஜூன் மாதமும், அடுத்தடுத்த கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விலைவாசி ஏற்றத்தையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது அவற்றை பற்றி பார்க்கலாம்.

Hindustan Zinc: மொத்த பங்குகளும் விற்பனை.. மத்திய அரசு முடிவு!
  • பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் குறைத்துள்ளது மத்திய அரசு.

  • ஸ்டீல் துறை மற்றும் பிளாஸ்டிக் துறைக்கு தேவையான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

  • சில ஸ்டீல் பொருட்கள் மற்றும் இரும்பு தாதுக்கு ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இதனால் ஸ்டீல் விலை குறையும்.

  • நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டில் இறக்குமதி வரி இல்லாமல் 20 லட்சம் டன் கச்சா சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும். இதனலா சுமார் 9 கோடி பயனாளிகள் பயன்பெறுவார்கள்.

  • சர்க்கரை கையிருப்பை உறுதி செய்வதற்காக 100 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே ஏற்றுமதி செய்யலாம் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு செப்டம்பர் வரை அமலில் இருக்கும்.

  • கோதுமை விலையை கட்டுக்குள் வைப்பதற்காக கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் உரம் மானியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக 1.1 லட்சம் கோடி ரூபாய் உரம் மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்