ஆப்நகரம்

உங்கள் CIBIL Scoreஐ பாதுகாப்பது எப்படி? இந்த தவறுகளை செய்யாதிங்க!

உங்களின் சிபில் ஸ்கோரை நல்ல நிலையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 18 Dec 2022, 12:42 pm
ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட்ட சிபில் ஸ்கோர் (CIBIL Score) நிர்ணயிக்கப்பட்டிருக்கும். உங்களின் கடன் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஏற்ப சிபில் ஸ்கோர் ஏறி இறங்கும். நிறைய கடன்களை வாங்குவது, கடனை சரிவர செலுத்தாமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சிபில் ஸ்கோர் குறையும்.
Samayam Tamil credit score
credit score


மறுபக்கம், குறைவான கடன்களை பெறுவது, கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவது போன்ற செயல்களாக் சிபில் ஸ்கோர் உயரும். சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டிக்கு கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பலன்கள் உள்ளன.

வேகமாக கடன் பெறுவதற்கும் நல்ல சிபில் ஸ்கோர் உதவும். அண்மைக்காலமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளதால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர்ந்துவிட்டது.

இந்த சூழலில், கிரெடிட் ஸ்கோரை நல்ல அளவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிபில் ஸ்கோர் என்பது 300க்கும் 900க்கும் இடையே இருக்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்ல அளவில் பாதுகாப்பது எப்படி?

சிபில் ஸ்கோர் ஒரே நாளில் மாறிவிடாது. கிரெடிட் ஸ்கோரை நல்ல நிலைக்கு ஏற்றுவதற்கு சுமார் 18 மாதம் முதல் 36 மாதங்கள் வரை ஆகும். இந்த காலகட்டத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கார் விலையை உயர்த்தும் ஹோண்டா.. கம்மி ரேட்டில் வாங்க கடைசி வாய்ப்பு!
அதிக கடன்

அதிகம் செலவு செய்வதால் நிறைய கடன்களை வாங்குவது, நீண்டகாலத்துக்கு கடன்களை வாங்குவது உங்கள் சிபில் ஸ்கோரை குறைக்கும். எனவே, அளவுக்கு அதிகமாக கடன்களை வாங்குவது, ஒரே நேரத்தில் பல்வேறு கடன்களை வைத்திருப்பது சிபில் ஸ்கோரை பாதிக்கும்.

கிரெடிட் கார்டு பில்

கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தாமல் கடைசி தேதிக்கு மேல் தாமதிப்பது, நீண்டகாலத்துக்கு தாமதிப்பது போன்ற செயல்களால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும். எனவே, உரிய நேரத்தில் கிரெடிட் கார்டு கட்டணம், EMI ஆகியவற்றை செலுத்திவிடவும்.

பிணையில்லா கடன்கள்

பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் ஆகியவை பிணையில்லா கடன்கள் ஆகும். தொடர்ந்து பிணையில்லா கடன்களை பெறுவது, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிணையில்லா கடன்களை வாங்குவது ஆகியவை சிபில் ஸ்கோரை பாதிக்கும்.

EMI செலுத்தாமல் இருப்பது

தற்போது நீங்கள் செலுத்தி வரும் கடன்களுக்கான EMI தொகையை மாதம் தோறும் உரிய தேதிக்குள் செலுத்தவும்.

கூட்டு கணக்குகள்

நீங்கள் யாருடனாவது கூட்டு கணக்கு (Joint account) தொடங்கியிருந்தாலும், வேறு நபர்களின் கடனுக்கு உத்தரவாதம் அளித்திருந்தாலும் (Guarantor) அவர்கள் கடனை சரியாக செலுத்தவில்லை எனில் உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே, கூட்டு கணக்குகள், கடனுக்கு உத்தரவாதம் அளிப்பது போன்ற செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்