ஆப்நகரம்

ரயிலில் முதியோருக்கு சலுகை கிடையாதா? வெளியான அதிர்ச்சி தகவல்!

உண்மை இதுதான்!

Samayam Tamil 19 Jun 2022, 5:47 pm
மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் வழங்கப்படும் டிக்கெட் சலுகை இனி மீண்டும் தொடங்கப்படுவதாக தகவல் பரவியுள்ளது. அது உண்மையா?
Samayam Tamil important update on resumption of senior citizens railway concessions
ரயிலில் முதியோருக்கு சலுகை கிடையாதா? வெளியான அதிர்ச்சி தகவல்!



ரயில்களில் சலுகை!

கொரோனா தொற்று வந்த போது, ரயில்வே பல சேவைகளை நிறுத்தியது. ஆனால், நிலைமை மீண்டும் சீரான நிலையில், தற்போது மீண்டும் பல சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. உதாரணமாக, பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர, பொது டிக்கெட்டும் தற்போது கிடைக்க துவங்கியுள்ளது.

காத்திருக்கும் மூத்த குடிமக்கள்!

இந்திய ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். இது குறித்து நிறைய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. உண்மையில், கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பு, மூத்த குடிமக்கள் ரயில்களில் டிக்கெட் தள்ளுபடியைப் பெற்றனர். அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

போலியான செய்தி!

2022 ஜூலை 1 முதல் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் விலக்கு அளிக்கப்படும் என்று தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தி போலியான செய்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. ஏனெனில் இது வரை இதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் ரயில்வேயால் வெளியிடப்படவில்லை. இது போலியான தகவல் என்று தெரியவந்துள்ளது.

உண்மை இதுதான்!

இந்த விவகாரம் குறித்து PIB Fact Check ட்வீட் செய்துள்ளது. அதில், 'இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கும் என்று ஒரு போலி ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்திய ரயில்வேயால் திவ்யாங்ஜன், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்