ஆப்நகரம்

விவசாயிகளுக்கு 2000 ரூபாய்.. பணம் வரும் தேதி இதுதான்!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 23 Apr 2023, 10:21 am
இந்தியாவில் உள்ள 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் 14வது தவணைக்காக காத்திருக்கின்றனர். முன்னதாக, 13வது தவணையை பிப்ரவரி 27ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் அரசு செலுத்தியது. அப்போது 8.42 கோடி விவசாயிகளுக்கு 13ஆவது தவணைப் பணம் வழங்கப்பட்டது.
Samayam Tamil pm kisan


அந்த தவணை வந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆன நிலையில், 14ஆவது தவணை குறித்த அப்டேட் வந்துள்ளது. இத்திட்டத்தில், விவசாயிகளுக்கு, 14வது தவணையாக 2000 ரூபாயும், ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, பிஎம் கிசான் திட்டத்தின் தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளியிடப்படும். கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் பெறப்பட்ட 11வது தவணை 2022 மே 31ஆம் தேதியில் மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை 14வது தவணை விரைவில் வங்கிக் கணக்கில் வர வாய்ப்பு உள்ளது.

இந்த முறை மே 15ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் தவணை பணத்தை மத்திய அரசு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், தவணைப் பணம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உரிய நேரத்தில் பணம் வந்தால் விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைக்கும். ஆனால், இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பதிவு செய்வது எப்படி?


நீங்கள் திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்து இதில் பதிவு செய்ய வேண்டும் என்றால், நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பதிவு செய்யலாம். PM Kisan வெப்சைட்டிலேயே இதற்கான வசதி உள்ளது. அல்லது உங்களுக்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையத்தில் இத்திட்டத்துக்கு நீங்கள் விண்ணபிக்கலாம்.

பிஎம் கிசான் திட்டத்தில் விண்ணப்பிக்க நில விவரங்கள், விவசாயிகளின் பெயர், ஆதார், மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் தேவைப்படும். இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிஎம் கிசான் நிதியுதவியைப் பெறுவதற்கு கேஒய்சி சரிபார்ப்பு மிகவும் அவசியம்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்