ஆப்நகரம்

ரேஷன் கார்டு இருக்கா? அப்போ உடனே இந்த வேலைய முடிங்க!

கடைசி தேதி முடிய போகுது!

Samayam Tamil 6 May 2022, 9:11 am
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் கார்டை அதனுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் எதுவும் கிடைக்காது!
Samayam Tamil important work pending for ration card holders link aadhaar card immediately
ரேஷன் கார்டு இருக்கா? அப்போ உடனே இந்த வேலைய முடிங்க!


ரேஷன் கார்டு!

ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்களை மலிவு விலையிலும் இலவசமாகவும் வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. திருமணம் ஆன பின்னர் தனியாக அந்த குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே இந்த உதவிகளைப் பெறமுடியும். உணவு தானியங்கள் மட்டுமல்லாமல் அரசிடமிருந்து அவ்வப்போது நிதியுதவியும் கிடைக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஜூலையில் வரும் ஹேப்பி நியூஸ்!

ஒரே நாடு ஒரே ரேஷன்!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டம் இன்னும் முழுவதுமாக அமலுக்கு வரவில்லை. இதன் அம்சம் என்னவென்றால் நம்மிடமுள்ள ரேஷன் கார்டை வைத்து வேறு எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

வீடு வாங்குவோருக்கு புதிய தலைவலி.. இனி எல்லாமே அதிகம்தான்!

ஆதாருடன் இணைப்பு!

ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு தரப்பில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டை அதனுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் உணவு தானியங்களையும் நலத்திட்ட உதவிகளையும் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

விறகு அடுப்புக்கு மாறும் பெண்கள்.. விரட்டும் சிலிண்டர் விலை.. தீர்வுதான் என்ன?

கடைசி நாள்!

ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி முதலில் மார்ச் 31 ஆக இருந்தது. ஆனால் நிறையப் பேர் இணைக்காமல் இருந்தனர். எனவே தற்போது அதன் காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உணவு மற்றும் பொது விநியோக துறை வெளியிட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் இன்னும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் 2022 ஜூன் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

புறநகர் ரயில் டிக்கெட் குறைப்பு.. அதுவும் இன்று முதல்!

இணைப்பது எப்படி?

ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு ஒரிஜினல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ் ஆகியவை தேவை. இந்த ஆவணங்களைக் கொண்டு uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இணைக்கலாம். தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, உங்களுடைய மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிடுவதன் மூலம் எளிதாக இணைத்துவிடலாம்.

உலகிலேயே தனிமையான வீடு.. எந்த டென்ஷனும் இல்லை.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்