ஆப்நகரம்

நிலக்கரி உற்பத்தி.. மே மாதம் எத்தனை டன் தெரியுமா?

2023 மே மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 76.26 மில்லியன் டன் அளவை எட்டியுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 2 Jun 2023, 10:50 am
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2023 மே மாதத்தில் 76.26 மில்லியன் டன் அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாத உற்பத்தியைவிட 7.10 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 71.21 மில்லியன் டன்னாக இருந்தது. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் (கோல் இந்தியா) உற்பத்தி 2023 மே மாதத்தில் 59.94 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டைவிட 9.54 சதவீதம் அதிகமாகும்.
Samayam Tamil coal


கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் 54.72 மில்லியன் டன் அளவிற்கு கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரியை உற்பத்தி செய்திருந்தது. தடையற்ற நிலக்கரி போக்குவரத்தை உறுதி செய்ய பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகம் மூலம் ரயில் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலக்கரி விநியோகமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

முன்னதாக, 2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 73.02 மில்லியன் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத உற்பத்தியை விட 8.67 சதவீதம் அதிகமாகும். ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், மொத்த நிலக்கரி ஏற்றுமதி 2022 ஏப்ரல் மாதத்தில் 71.99 மெட்ரிக் டன்னில் இருந்து 2023 ஏப்ரல் மாதத்தில் 80.45 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. இது 11.76 சதவீத வளர்ச்சியாகும்.

ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசு புதிய சாதனை!
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. கடந்த 9 ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி 47 சதவீதம் அதிகரித்து 893.08 மில்லியன் டன்னாக இருந்தது. அதேபோல, நிலக்கரி விநியோகம் 877.74 மில்லியன் டன்னாக அதிகரித்து 45.37 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2023-24 நிதியாண்டுக்கான நிலக்கரி உற்பத்தி 893.08 மில்லியன் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்