ஆப்நகரம்

பண மழையில் குளிக்கும் தமிழ்நாடு!

கொரோனா பிரச்சினைகளையும் தாண்டி அதிக முதலீடுகளைத் திரட்டி தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

Samayam Tamil 30 Jul 2020, 1:32 pm
இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. மார்ச் மாதத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. அனைத்து துறைகளிலும் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. மாநில அரசுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் கொரோனா நிவாரணப் பணிகளிலும் மும்முரமாக இயங்கின. முதலீடுகள் குறைந்து வரி வருவாயும் குறைந்து செலவுகள் அதிகரித்த காலம்!
Samayam Tamil investment


ஒருபுறம் செலவுகளும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இருந்தாலும் மறுபுறம் முதலீடுகளைத் திரட்டுவதில் தமிழகம் தீவிரமாக இருந்துள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மட்டும் ரூ.18,000 கோடி அளவிலான முதலீடுகளைத் தமிழகம் ஈர்த்துள்ளதாக பிராஜெக்ட்ஸ் டுடே என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களுக்கான பட்டியலில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழகத்துக்கு முதலிடம்.

Gold Rate in Chennai: விண்ணை முட்டும் தங்கம் விலை!

தமிழகத்தைப் பொறுத்தவரையில், மே 27 முதல் ஜூலை 27 வரையில் ரூ.30,000 கோடி வரையிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதுதவிர, எட்டு ஒப்பந்தங்களின் கீழ் 11 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்கி அதற்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளது. சிப்காட் மற்றும் டிட்கோ அமைப்புகள் இணைந்து தங்களது திறனையும் மீறி முதலீடுகளை ஈர்ப்பதிலும் புதிய தொழில்கள் தொடங்குவதில் ஆதரவாக இருப்பதிலும் சிறப்பாகப் பங்காற்றியுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரித் தாக்கல்: கடைசி தேதி மீண்டும் நீட்டிப்பு!

இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் தமிழகத்துக்கு ஏதேனும் நல்ல விஷயங்களைச் செய்து முன்னேறிச் செல்ல இதுவே சரியான நேரம் என்று தமிழக தொழில் துறை செயலாளரான என்.சண்முகநாதன் கூறியுள்ளார். தமிழகத்துக்கு பல்வேறு திறன்களும் வளமும் இருப்பதாகவும் அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்