ஆப்நகரம்

வருமான வரி செலுத்துவோருக்கு தடை.. புதிய ரூல்ஸ் என்ன சொல்கிறது?

வருமான வரி செலுத்துவோர் பென்சன் திட்டத்தில் இணைவதற்கு மத்திய அரசு தடை.

Samayam Tamil 12 Aug 2022, 11:58 am
அமைப்புசாரா ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவதற்காக அடல் பென்சன் யோஜனா (Atal Pension Yojana) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.
Samayam Tamil cash


புதிய விதிமுறைப்படி, வருமான வரி செலுத்தும் நபர்களால் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இணைய முடியாது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடல் பென்சன் யோஜனாவில் வருமான வரி செலுத்தும் நபர்கள் இணைய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடல் பென்சன் யோஜனா சிறு சிறு முதலீட்டிலேயே பென்சன் வருமானம் தரக்கூடிய அருமையான திட்டம். இந்த திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இணைய முடியாது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளார்.

தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்த பவானி அம்மன்.. எவ்வளவுன்னு தெரியுமா?
எனினும், வருமான வரி செலுத்துவோர் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டுமெனில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு அடல் பென்சன் திட்டத்தில் இணைய முடியாது.

அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு, வருமான வரி செலுத்தும் ஒரு நபர் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இணைந்தால், அவருக்கான கணக்கு உடனடியாக மூடப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கணக்கு மூடப்படும் நாளில் பென்சன் நிதி சேர்ந்திருந்தால் அந்த தொகை கணக்குதாரரிடம் செலுத்தப்பட்டுவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்