ஆப்நகரம்

சென்னை: ஷாக் கொடுத்த காய்கறி விலை!

காய்கறி வாங்கச் செல்பவர்கள் விலை நிலவரம் என்ன என்று பார்த்துவிட்டுச் செல்லுங்கள். சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...

Samayam Tamil 4 Dec 2020, 1:32 pm
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு சில நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்விலேயே இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் காய்கறி விலையில் வீழ்ச்சி காணப்பட்ட நிலையில் இன்று ஷாக் கொடுக்கும் விதமாகப் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Samayam Tamil veg price


சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 4) ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 10 ரூபாயாக இருந்தது. தக்காளி விலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏறவும் இறங்கவுமாக உள்ளது. வெங்காயம் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து ஆறு நாட்களாக வெங்காயம் விலை மாற்றம் இல்லாமல் 30 ரூபாயிலேயே இருக்கிறது. கேரட் விலை நேற்று 30 ரூபாயிலிருந்து இன்று அதிரடியாக 45 ரூபாய்க்கு வந்துள்ளது. அவரைக்காய் விலை 20 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 10 ரூபாயாகவும் இருக்கிறது.

Gold rate in chennai: இன்றைய தங்கம் விலை இதுதான்!

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி - ரூ.15
வெங்காயம் - ரூ.30
அவரைக்காய் - ரூ.20
பீன்ஸ் - ரூ.10
பீட்ரூட் - ரூ.10
வெண்டைக்காய் - ரூ.10
மாங்காய் - ரூ.50
நூக்கல் - ரூ.10
உருளைக் கிழங்கு - ரூ.35
முள்ளங்கி - ரூ.8
புடலங்காய் - ரூ.10
சுரைக்காய் - ரூ.10
பாகற்காய் - ரூ.10
கத்தரிக்காய் - ரூ.15
முட்டைகோஸ் - ரூ.8
குடை மிளகாய் - ரூ.20
கேரட் - ரூ.45
காளிபிளவர் - ரூ.15
சவுசவு - ரூ.5
தேங்காய் - ரூ.27
வெள்ளரிக்காய் - ரூ.8
முருங்கைக்காய் - ரூ.10
இஞ்சி - ரூ.30
பச்சை மிளகாய் - ரூ.35
கருணைக் கிழங்கு - ரூ.20
கோவைக்காய் - ரூ.10

அடுத்த செய்தி

டிரெண்டிங்