ஆப்நகரம்

ஏற்றுமதியில் மண்ணைக் கவ்விய இந்தியா!

பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வணிக ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Mar 2021, 10:32 pm
இந்தியாவின் வணிக ஏற்றுமதி குறித்த விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 0.25 சதவீத வீழ்ச்சியுடன் 27.67 பில்லியன் டாலர் மதிப்புக்கு பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்து ஏற்றுமதி வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் மீண்டும் வீழ்ச்சி தொடங்கியுள்ளது. ஏற்றுமதி குறைந்திருந்தாலும் இறக்குமதியில் 6.98 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil export


பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 40.55 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. இதன் மூலம் பிப்ரவரி மாதத்துக்கான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 12.88 சதவீதமாக வளர்ந்துள்ளது. 2020 பிப்ரவரி மாதத்தில் கூட இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 10.16 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் இந்தியாவின் வணிக ஏற்றுமதி மதிப்பு 255.92 பில்லியன் டாலராக இருந்துள்ளது. 2019-20 ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் இது 291.87 பில்லியன் டாலராக இருந்தது.

கல்விக் கடன் வேணுமா... எந்த பேங்க்ல வாங்கலாம்? எவ்வளவு வட்டி?
இறக்குமதியைப் பொறுத்தவரையில், ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் 23 சதவீத வீழ்ச்சியுடன் 340.88 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2021 பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 16.63 சதவீத உயர்வுடன் 8.99 பில்லியன் டாலராக இருந்துள்ளது. ஏப்ரல் - பிப்ரவரி காலத்தில் இதன் மதிப்பு 72.08 பில்லியன் டாலராக இருந்தது. இது 40.18 சதவீதம் வீழ்ச்சியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்