ஆப்நகரம்

சீன பொருட்களுக்கு வரி.. லிஸ்ட் இதுதான்.. அரசு அறிவிப்பு!

ஐந்து சீன பொருட்களுக்கு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதித்த இந்திய அரசு.

Samayam Tamil 26 Dec 2021, 4:50 pm
இந்தியாவில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டு வந்த ஐந்து பொருட்களுக்கு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி (anti dumping duty) விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chinese goods


சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பொருட்கள் இந்தியாவுக்குள் குவிக்கப்படுகின்றன. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இதைத் தடுக்கவே குறிப்பிட்ட பொருட்கள் மீது இந்திய அரசு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதிக்கிறது.

இந்நிலையில் அலுமினியம், சோடியம் ஹைட்ரோசல்பைட், சிலிகான் சீலண்ட், சோலார் போட்டோவோல்டாய்க் மாட்யூல்ஸ், ஹைட்ரோஃப்ளோரோகார்பன் ஆகிய பொருட்கள் இந்தியாவில் அதிகளவில் குவிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர் சரிவு!
இதையடுத்து, எவ்வளவு பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து வர்த்தக அமைச்சகம் விசாரணை நடத்தியது. பின்னர், வர்த்தக அமைச்சகத்தின் பரிந்துரை அடிப்படையில் மேற்கூறிய ஐந்து பொருட்கள் மீதும் இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல, ஈரான், ஓமான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜிப்சம் பவுடர் மீது இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்