ஆப்நகரம்

இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும்? பொருளாதார வல்லுநர் கணிப்பு!

இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்று பொருளாதார வல்லுநர் அரவிந்த் வீர்மணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jan 2022, 8:56 pm
கொரோனா பிரச்சினையால் 2020ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 2021ஆம் ஆண்டில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாம் அலையால் வீழ்ச்சி நீடித்தது. எனினும், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தாலும் சீரிய நடவடிக்கைகளாலும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஒமைக்ரான் பிரச்சினை இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் அளவுக்கு இல்லை.
Samayam Tamil gdp


2021-22 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10 சதவீதம் வரையில் வளர்ச்சி காணும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியா 9.5 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் வீர்மணி தெரிவித்துள்ளார். PHDCCI தொழில் துறை கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், அரசின் செலவினமும் ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரித்துள்ளதால் இந்த வளர்ச்சி சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஓ மை காட்! ஒமைக்ரானால் இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்து!
அரசு தரப்பு அறிக்கையின்படி, 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்திருந்தது. எனினும், 2021-22 நிதியாண்டில் 9.2 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 9 சதவீதம் முதல் 10 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்று கூறி வருகின்றன. ஆனால், இப்போது ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருவதால் பொருளாதார வளர்ச்சி குறையவும் வாய்ப்பு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்