ஆப்நகரம்

டிஜிட்டல் சேமிப்பு கணக்கு நிறுத்தம்.. தபால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்!

டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்கும் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இந்திய தபால் வங்கி தெரிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 24 May 2023, 2:23 pm
இந்திய தபால் பரிவர்த்தனை வங்கி (India Post Payments Bank) தற்காலிகமாக டிஜிட்டல் சேமிப்பு கணக்கு (Digital Savings Bank Account) சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Samayam Tamil india post payments bank
india post payments bank


இந்திய தபால் துறையின் கீழ் இந்திய தபால் வங்கி இயங்கி வருகிறது. சேமிப்பு உள்ளிட்ட பொதுவான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தபால் வங்கி வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் சேமிப்பு கணக்கு வசதியையும் இந்திய தபால் வங்கி வழங்கி வந்தது.

இந்நிலையில், டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய தபால் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தபால் வங்கி வெளியிட்டுள்ள செய்டியில், “மே 18ஆம் தேதி முதல் நியூ டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டிஜிட்டல் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது. அவர்கள் தொடர்ந்து சேவைகளை பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.

ஆக, ஏற்கெனவே தபால் வங்கியில் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல எல்லா சேவைகளையும் பயன்படுத்தலாம். புதிதாக டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேமிப்பு கணக்கு:

தபால் வங்கியின் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை மொபைலிலேயே ஆப் மூலம் தொடங்க முடியும். 18 வயதை தாண்டிய அனைவரும் ஆதார் கார்டு, பான் கார்டு இருந்தால் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும்.

டிஜிட்டல் சேமிப்பு கணக்கின் வசதிகள்:

  • உடனடியாக கணக்கை தொடங்கலாம்.

  • ரூபே டெபிட் கார்டு

  • மாத குறைந்தபட்ச இருப்பு தொகை (Monthly Average Minimum Balance) கிடையாது.

  • ஜீரோ பேலன்ஸுடன் (Zero balance) கணக்கை தொடங்கலாம்.

  • IMPS மொபைல் பரிவர்த்தனை வசதி.

  • பில் கட்டணம் மற்றும் ரீச்சார்ஜ் சேவைகள்.

  • யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் செய்துகொள்ளலாம்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்