ஆப்நகரம்

ஜியோ இலவச சேவை; வர்த்தக தந்திரம் என ஏர்டெல் விளக்கம்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கிவரும் இலவச 4ஜி சேவை, ஒரு வர்த்தக தந்திரம் என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.

TNN 23 Sep 2016, 5:09 pm
ரிலையன்ஸ் ஜியோ வழங்கிவரும் இலவச 4ஜி சேவை, ஒரு வர்த்தக தந்திரம் என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil india ranked 143 among 188 countries in health study
ஜியோ இலவச சேவை; வர்த்தக தந்திரம் என ஏர்டெல் விளக்கம்

ஜியோவின் இந்த வர்த்தக தந்திரம், அதன் கடுமையான போட்டி போன்றவற்றை எதிர்பார்த்தே காத்திருந்ததாகவும், இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் இனிவரும் நாட்களில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுனில் பார்தி மிட்டல் கூறியுள்ளார்.

ஜியோ நிறுவனம், இலவசமாகவும், சலுகை விலையிலும் 4ஜி சேவை அளிப்பது, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, அதிக வர்த்தகம் ஈட்டவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகளை குறைகூறும் வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் சில நாட்களுக்குப் பிறகே, ரிலையன்ஸ் ஜியோ பற்றிய உண்மை முகம் தெரியவரும். இதுபோன்ற ஏராளமான வர்த்தக தந்திரங்களை செயல்படுத்த ஏர்டெல் நிறுவனத்தாலும் முடியும். ஆனால், வாடிக்கையாளர் நலனை கருத்தில்கொண்டு, வர்த்தகம் செய்துவருவதாக, சுனில் பார்தி மிட்டல் சுட்டிக்காட்டி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்