ஆப்நகரம்

கோடிகளை இழந்த விமான நிறுவனங்கள்! ஒமைக்ரான் செய்த சம்பவம்!

ஒமைக்ரான் உள்ளிட்ட பிரச்சினைகளால் விமான நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jan 2022, 6:42 pm
2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு விமானங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவோரை அழைத்துச் செல்லும் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும் இழப்புகள் குறையவில்லை.
Samayam Tamil airlines


கொரோனா பிரச்சினை ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் விமான எரிபொருள் விலையேற்றம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. வருமானத்தை விட செலவுகளே அதிகமாக இருந்தன. இதனால் 2021-22 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை இந்திய விமான நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ளன. கிரிசில் ஆய்வு நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நிதியாண்டில் இந்திய விமான நிறுவனங்களுக்கு 44 சதவீதம் கூடுதல் இழப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் ரூ.13,853 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிதியாண்டின் மத்தியில் விமான நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய சூழலில் ஒமைக்ரான் பிரச்சினை வந்து மீண்டும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு நல்ல காலம்.. வெளியாகப்போகும் நச் அறிவிப்புகள்!
இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் கடன் தொல்லை காரணமாக சமீபத்தில்தான் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த கொரோனா பிரச்சினையால் தனியார் நிறுவனங்களுமே நெருக்கடியான சூழலில் சிக்கியுள்ளன.

விமான எரிபொருள் விலையைப் பொறுத்தவரையில், 2021 நவம்பர் மாதத்தில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.83 ஆக உயர்ந்தது. இந்த நிதியாண்டில் விமான எரிபொருளின் சராசரி விலையே 41 ரூபாய்தான். இரு மடங்கு விலையேற்றத்தால் செலவுகள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்