ஆப்நகரம்

பொருளாதார வளர்ச்சி: மோடி நம்பிக்கை!

விரைவில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 May 2020, 10:08 am
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக நேற்று கலந்துரையாடினார். ஊரடங்கு காலத்தில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மேற்கொள்ளும் இந்த ஐந்தாவது ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கைத் தளர்த்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில முதல்வர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மே 17ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று நரேந்திர மோடி சூசகமாகக் கூறினார்.
Samayam Tamil மோடி


இக்கூட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து நரேந்திர மோடி பேசுகையில், “தற்போதைய சூழலில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் தொழில் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருவதைக் காண முடிகிறது. வரும் நாட்களில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தற்போது வலுவாக இருக்கிறது. எனவே பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதும், அதில் பொதுமக்களின் பங்களிப்பும் மிக அவசியமானதாகும்” என்று கூறினார்.

ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற்ற 2.23 கோடிப் பேர்!

கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜிய வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. வளர்ச்சியை மீட்டெடுக்க ரூ.4.2 லட்சம் கோடி வரையில் நிதியுதவி தேவை என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் தரப்பிலிருந்து கொரோனா பாதிப்பைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு முழுவதுமாகத் தளர்த்தப்பட்டு தொழில் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தொழில் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஊரடங்கு தளர்த்தப்படுமா, பொருளாதார வளர்ச்சி திரும்புமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்