ஆப்நகரம்

இந்திய ஊழியர்களின் அறியாமையால் ஏற்படும் தண்ட செலவு.. எச்சரிக்கும் ரிப்போர்ட்!

இன்சூரன்ஸ் பற்றி விழிப்புணர்வு இல்லாததால் இந்திய ஊழியர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படுவதாக சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 16 Apr 2023, 5:46 pm
இந்தியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ காப்பீட்டு (Health Insurance) வசதிகள் பற்றி விழிப்புணர்வே இல்லை என சர்வே வாயிலாக தெரியவந்துள்ளது.
Samayam Tamil health insurance
health insurance


பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதிகளை வழங்கி வருகின்றன. இதற்கான பிரீமிய செலவுகளையும் அந்தந்த நிறுவனங்களே ஏற்றுக்கொள்கின்றன. ஆனாலும், இதுபோன்ற காப்பீட்டு வசதிகள் பற்றி இந்திய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என Onsurity நிறுவனம் நடத்திய சர்வே வாயிலாக தெரியவந்துள்ளது.

இந்த விழிப்புணர்வின்மையால் ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு வசதிகளை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாகவும், இதனால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் பலன்கள் சென்று சேருவதில்லை எனவும் சர்வே ரிப்போர்ட் கூறுகிறது.

இதனால் மருத்துவ ஆலோசனை, தடுப்பு சிகிச்சை, மனநல உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்திய ஊழியர்களுக்கு கிடைக்காமல் வீணாக போய்விடுவதாக சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சர்வேயில் பங்கேற்ற 60% பேர் தங்களுக்கு எந்த நிறுவனத்தால் இன்சூரன்ஸ் சேவை வழங்கப்படுகிறது என்பது பற்றி எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும், 90% பேர் தங்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் இன்சூரன்ஸ் சேவை பற்றியே தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு இன்சூரன்ஸ் போடப்பட்ட தொகை பற்றி எதுவும் தெரியாது என்று 20% பேர் தெரிவித்துள்ளனர். வெறும் 10% பேர் மட்டுமே தங்கள் நிறுவனத்தால் வழங்கப்படும் இன்சூரன்ஸ் சேவை கீழ் கிளைம் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சர்வேயில் பங்கேற்றவர்களில் 84% பேர் மருத்துவர் பரிந்துரை செய்யும்போது மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்திய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும், இன்சூரன்ஸ் பற்றிய அறியாமையாலும் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வசதிகள் கிடைக்காமல் போவது மட்டுமல்லாமல், சொந்தமாக செலவு செய்து நிதிச் சுமைக்கு ஆளாகின்றனர் எனவும் இந்த சர்வே வாயிலாக தெரிகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்