ஆப்நகரம்

Budget 2023: ஏற்றுமதியை அதிகரிக்க இதை செய்யணும்.. அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை!

பட்ஜெட்டில் மத்திய அரசிடம் இருந்து ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கும் சில சலுகைகள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 18 Dec 2022, 2:06 pm
2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் பணிகளை நிதியமைச்சகம் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே பட்ஜெட் தொடர்பாக மாநில நிதியமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்துறையினர், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகளிடம் நிதியமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.
Samayam Tamil exports
exports


கடந்த சில மாதங்களாக இந்தியாவில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக உள்ளது. இதனால், வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால், இந்திய ரூபாய் மதிப்பும் வலுவிழந்துள்ளது. இதை சமாளிக்க ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்நிலையில், ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமெனில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக சில அறிவிப்புகளை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதில் மின்சார வரி ரத்து, எளிதாக கடன் பெறுவது போன்ற நடவடிக்கைகள் தேவை என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.

ஏற்றுமதி பொருட்களுக்காக வரி சலுகைகளை வழங்குவது மட்டுமல்லாமல், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்காகவும் வர்த்தகத் துறைக்கு நிதி அமைச்சகம் போதிய நிதி வழங்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

எங்களோட பிரச்சினையே இதுதான்.. திருப்பூர் ஜவுளித் துறையினர் வேதனை!
இத்திட்டத்தில் ஏற்கெனவே ஏற்றுமதி பொருட்கள் மீதான மத்திய வரிகள், மாநில வரிகள், கட்டணங்கள் திருப்பிச் செலுத்தப்படுகின்றன. இத்துடன் நின்றுவிடாமல், ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான நிதியையும் நிதி அமைச்சகம் வழங்க வேண்டும் என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்.

இதுபோக, சுங்க வரியில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். மேலும், குறைந்த வட்டிக்கு ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என கோருகின்றனர். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தியுள்ளதால் கடன்களுக்கான வட்டி உயர்ந்துவிட்டது. எனவே, வட்டி சலுகை வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கேட்கின்றனர்.

ஏற்றுமதி துறை பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வர்த்தகம் செய்வது மட்டுமல்லாமல் அந்நிய செலாவணி வருவாய் ஈட்டித் தருவதில் ஏற்றுமதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதால் ரூபாய் மதிப்பு பாதுகாக்கப்படுகிறது.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஏற்றுமதி துறைக்கு முக்கிய பங்கு இருப்பது மட்டுமல்லாமல், ஏராளமான வேலை வாய்ப்புகளையும் வழங்கும் துறையாக ஏற்றுமதி துறை உள்ளது. எனவே, ஏற்றுமதியை அதிகரிக்க மேற்கூறிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோருகின்றனர்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்