ஆப்நகரம்

சீன யுவானை பயன்படுத்த வேண்டாம்.. வர்த்தக நிறுவனங்களிடம்.. இந்தியா அரசு வேண்டுகோள்!

சீனாவின் யுவானைப் பயன்படுத்தி, வர்த்தகம் மேற்கொள்வதை வங்கிகள் மற்றும் வர்த்தகர்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Samayam Tamil 14 Mar 2023, 1:54 pm
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு நாட்டின் திர்ஹாம்களைப் பயன்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Yuan vs rupees


ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தினமும் சுமார் 12 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி ரஷ்யாவிலிருந்து சமையல் எண்ணெய் மற்றும் உரங்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியா ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் அல்லாமல் உள்நாட்டு கரன்சிகளான ரூபாய் மற்றும் ரூபிள் ஆகியவற்றின் மூலம் யூரோ வாயிலாகவும் வர்த்தகம் செய்ய முடிவு செய்திருந்தன.

இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் இறக்குமதி அல்லது ஏற்றுமதிக்கு டாலருக்கு பதிலாக ரூபாயில் தொகையை செலுத்தும் வசதியை வோஸ்ட்ரோ கணக்கு மூலம் பெறுகின்றன. இந்தியாவிலும் Vostro கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை ரஷ்யாவுடன், இந்திய ரூபாய் மூலமாக அதிக கொடுக்கல் வாங்கல் நடக்கவில்லை. ஏனெனில் இந்தியாவின் அதிக இறக்குமதி காரணமாக இந்திய ரூபாய் ரஷ்யாவில் அதிகமாக குவிந்து வருகிறது.

இந்நிலையில் சில வணிக நிறுவனங்கள் சீன யுவானைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வருகின்றனர். இந்நிலை நீடித்தால் இந்திய ரூபாயின் மதிப்பு அதளபாதாளத்திற்குச் சென்றுவிடும் என அரசு பயந்துள்ளது.

அதனால் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு யுவானைப் பயன்படுத்தாமல் வணிகர்கள் திர்ஹாம்களை பயன்படுத்துமாறு இந்திய வணிகர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியா-சீனா மோதல்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும்வரை யுவானைப் பயன்படுத்த முடியாது என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தியாளரான அல்ட்ராடெக் சிமென்ட், கடந்த ஆண்டு ரஷ்ய நிலக்கரியை வாங்க சீன யுவானைப் பயன்படுத்தியது. அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதால் அதிகாரிகளிடையே சில கவலைகளை எழுப்பியுள்ளது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்