ஆப்நகரம்

கேஸ் சிலிண்டருக்கு புதிய பிளான்.. இந்தியன் ஆயில் எடுத்த முடிவு!

கேஸ் சிலிண்டர் வெளியீட்டை அதிகரிப்பதற்கு புதிதாக மூன்று ஆலைகள் அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 27 Feb 2022, 5:58 pm
வடகிழக்கு மாநிலங்களில் புதிதாக மூன்று ஆலைகள் அமைப்பதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கேஸ் சிலிண்டருக்கு டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் புதிய ஆலைகளை அமைக்க இந்தியன் ஆயில் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil cylinder


இந்த ஆலைகள் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும். இந்த ஆலைகளின் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 8 கோடி சிலிண்டர்களை நிரப்புவதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய மூன்று ஆலைகளும் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம் ஆகியவற்றில் வரவிருக்கின்றன. இதற்கு சுமார் 350 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு டென்ஷன்.. எண்ணெய் விலையில் பூகம்பம்!
தற்போது வடகிழக்கு பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒன்பது ஆலைகளை இயக்கி வருகிறது. இதில் 5.23 கோடி சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிலிண்டர் நிரப்பும் திறனை அதிகரிக்க 325 கோடி முதல் 350 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக ஆலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்