ஆப்நகரம்

அதிரடியாக களமிறங்கிய ரயில்வே.. பயங்கர ஷாக்கில் IRCTC!

ஐஆர்சிடிசிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிடும் ரயில்வே.

Samayam Tamil 13 Mar 2022, 4:57 pm
ரயில் நிலையங்களில் உணவுக் கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் நிலையங்கள், உணவகங்கள் அமைப்பதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil irctc food plaza


ரயில்வே நிலையங்களில் ஏற்கெனவே ஐஆர்சிடிசி நிறுவனம் (IRCTC) உணவு நிலையங்கள், உணவகங்களை நடத்தி வருகிறது. நேரடி ரயில் சேவை சாராத உணவு சேவைகள், டிக்கெட் விநியோகம் போன்றவற்றை ஐஆர்சிடிசி நிறுவனம் கையாண்டு வருகிறது.

மறுபுறம் இந்திய ரயில்வே முழுவீச்சாக ரயில் சேவைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், ரயில்வே சார்பில் உணவகங்கள், ஃபாஸ்ட் ஃபுட் நிலையங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் கேன்சல்.. எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும்? முழு விவரம் இதோ..!
நிறைய ரயில் நிலையங்களில் உணவு கடைகளை தொடங்க ஐஆர்சிடிசி நிறுவனத்துக்கு இடம் உள்ளது. ஆனால் அங்கு ஐஆர்சிடிசி கடைகளை தொடங்காமல் வைத்திருப்பதால் ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுபோல சும்மா இருக்கும் இடங்களை மண்டல ரயில்வேயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அந்த இடங்களில் இந்திய ரயில்வே சார்பில் உணவுக் கடைகள் திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்