ஆப்நகரம்

சுண்டி இழுக்கும் நவராத்திரி மீல்ஸ்.. IRCTC அறிவிப்பால் ரயில் பயணிகள் குஷி!

நவராத்திரி பண்டிகைக்காக ரயில் பயணிகளுக்கு சிறப்பு உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே.

Samayam Tamil 27 Sep 2022, 12:16 pm
நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு ரயில் பயணிகளுக்காக இந்திய ரயில்வே சிறப்பு மெனு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நவராத்திரியின்போது ரயில்களில் பயணிக்கும் பக்தர்களுக்காகவே இந்த ஸ்பெஷல் மெனு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil navratri irctc meals


செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மெனு அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். நவராத்திரிக்கான சிறப்பு உணவுகளை https://www.ecatering.irctc.co.in/ இணையதளம் வாயிலாக ஆர்டர் செய்துகொள்ளலாம் எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

நவராத்திரி சிறப்பு மெனுவில் என்னென்ன உணவுகள் இடம்பெற்றுள்ளன? பராத்தா, ஆலூ சாப், ஜவ்வரிசி டிக்கி, ஜவ்வரிசி கிச்சடி, பனீர் மக்மாலி ஆகியவை நவராத்திரி மெனுவில் உள்ளன. இதுபோக கோஃப்தா கறி, ஜவ்வரிசி கிச்ரி நவராத்திரி தாலி ஆகியவையும் மெனுவில் உள்ளன.

மெனுவில் உணவு விலை 99 ரூபாய் முதல் தொடங்குகிறது. என்னென்ன ஆர்டர் செய்கிறோமோ அதற்கு ஏற்ப விலை மாறுபடுகிறது. IRCTC நிறுவனத்தின் இ-கேட்டரிங் வசதி உள்ள ரயில்களில் மட்டுமே நவராத்திரி சிறப்பு உணவுகள் கிடைக்கும்.

இந்திய ஊழியர்களின் சம்பளம் உயர்வு.. இந்த துறைகளை சேர்ந்தவர்களுக்கு குட் டைம்!
ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி?


  • அதில் ரயிலின் PNR நம்பரை பதிவிடவும்.

  • வரும் பட்டியலில், உங்களுக்கு விருப்பமான உணவகத்தை தேர்வு செய்யவும்.

  • உணவுகளை தேர்வு செய்து ஆன்லைனில் கட்டணம் செலுத்தவும்.

  • ரயிலில் உங்கள் இருக்கைக்கே நேரடியாக உணவு டெலிவரி செய்யப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்