ஆப்நகரம்

Rupee vs Dollar: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது.

Samayam Tamil 22 Jun 2022, 6:28 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்று வர்த்தகத்தின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 27 பைசா சரிந்து 78.40ஆக குறைந்துள்ளது.
Samayam Tamil Rupee


பங்குச் சந்தைகளில் இழப்பு, வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் போன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது ரூபாய் மதிப்பு மேலும் குறைவதை தடுத்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும் முக்கிய காரணமாக உள்ளது. இன்று வர்த்தகத்தில் டாலருக்கு நிக்ரான ரூபாய் மதிப்பு 78.13 என தொடங்கியது. இன்று ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 78.13 வரை உயர்ந்தது. எனினும் 78.40 வரை கீழே இறங்கியது.

Credit Card Rules: கிரெடிட் கார்டு ரூல்ஸ் மாற்றம்.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!
அமெரிக்க டாலரின் பலத்தை குறிக்கும் டாலர் இண்டெக்ஸ் 0.05% உயர்ந்துள்ளது. எனினும், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 4.46% சரிந்து 109.54 டாலராக குறைந்துள்ளது. இதுபோக பங்குச் சந்தைகள் பயங்கரமாக சரிந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருகின்றன.

இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 709.54 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 225.50 புள்ளிகள் சரிந்துள்ளன. ஜூன் 20ஆம் தேதி மட்டும் 2,701.21 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்