ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் எழுச்சி; வங்கிப் பங்குகளில் முதலீடு அதிகரிப்பு

இந்திய பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் எழுச்சிமிக்கதாக இருந்தது. இதனால், வர்த்தக முடிவில், பங்குச்சந்தைகள் 2% உயர்வை சந்தித்தன.

TNN 11 Jul 2016, 5:42 pm
இந்திய பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் எழுச்சிமிக்கதாக இருந்தது. இதனால், வர்த்தக முடிவில், பங்குச்சந்தைகள் 2% உயர்வை சந்தித்தன.
Samayam Tamil indian stock markets rallied nearly 2 in monday
பங்குச்சந்தைகளில் எழுச்சி; வங்கிப் பங்குகளில் முதலீடு அதிகரிப்பு


அமெரிக்க வேலைவாய்ப்பு புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. அதில், கடந்த மாதத்தில் மட்டும் 2,87,000 புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது அந்நாட்டின் பொருளாதாரம் மீட்சிநிலையில் காணப்படுவதை உறுதி செய்தது. இதையடுத்து, சர்வதேச முதலீட்டாளர்கள் கூடுதல் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதன்காரணமாக, ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டது. உள்நாட்டிலும், பங்குச்சந்தைகள் கிடுகிடு ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. அடுத்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில், ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படுவது உறுதி என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மத்திய அரசு எடுத்து வரும் வளர்ச்சிப் பணிகளும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக உள்ளன.

இதனால், வங்கித்துறை பங்குகள் அதிகளவில் விலை அதிகரித்தன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளிலும் விலை உயர்வு ஏற்பட்டது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வுடன், 27,627 ஆக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 145 புள்ளிகள் அதிகரித்து 8,468 புள்ளிகளாகவும் முடிந்தது. இது 2 சதவீத உயர்வாகும்.

கடந்த 11 மாதங்களின் அதிகபட்ச புள்ளிகளில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முடிவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்