ஆப்நகரம்

ரகுராம் ராஜன் தாக்கம்: பங்குச்சந்தைகள் சரிவு

பங்குச்சந்தைகள் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் தனது இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது.

TNN 20 Jun 2016, 9:39 am
மும்பை: பங்குச்சந்தைகள் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் தனது இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது.
Samayam Tamil indian stocks rupee fall after rajan departure
ரகுராம் ராஜன் தாக்கம்: பங்குச்சந்தைகள் சரிவு


வாரத்தில் முதல் நாளான இன்று தொடங்கிய மும்பை பங்குச்சந்தை 153.40 புள்ளிகள் குறைந்து, 26472.51 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி, 45 புள்ளிகள் குறைந்து 8125 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. மேலும், ரூபாயின் மதிப்பும், 61 காசுகள் வீழ்ச்சியடைந்து அமெரிக்க டாலர் ஒன்றுக்கு ரூ.67.69 என வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தைகளின் இன்றைய சரிவுக்கு, பதவி நீட்டிப்பு குறித்த ரகுராம் ராஜனின் அறிவிப்பே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது அறிவிப்பே இன்றைய பங்குச்சந்தைகளில் எதிரொலித்துள்ளதாகவும் தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், தனது பதவி காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் இல்லையெனில் இந்திய பொருளாதாரதிற்கு வீழ்ச்சி என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்