ஆப்நகரம்

இனியும் ஏமாத்த முடியாது மோடி ஜி!! பொருளாதார மந்தநிலை அம்பலம்!

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அரசு தரப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Nov 2019, 3:49 pm
2014ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து நாட்டில் பொருளாதார மந்தநிலை நீடிக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக, கடந்த ஒரு ஆண்டில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகக் குறைந்தது. இது அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது.
Samayam Tamil இனியும் ஏமாத்த முடியாது மோடி ஜி பொருளாதார மந்தநிலை அம்பலம்


அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மிக மந்தமாகவே இருக்கும் என்று கடந்த இரண்டு மாதங்களாகவே சர்வதேச ஆய்வறிக்கைகள் பல வெளியாகின. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.2 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் எனவும், இந்த முழு நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியை அடைவதே கடினம் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இது என்னப்பா இந்தியாவுக்கு வந்த சோதனை!!

ஆனால் மத்திய அரசோ, பொருளாதார மந்தநிலையே இல்லை என்று கூறிவந்தது. எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டது போன்ற உதாரணங்களைக் கூறி பூசி மொழுகி வந்தது மத்திய அரசு. ஆய்வறிக்கைகள் மத்திய அரசுக்கு எதிராக வெளிவரத் தொடங்கியதும் நாட்டில் பொருளாதார மந்தநிலை இருப்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன்னர் ஒப்புக்கொண்டார்.

இந்தியப் பொருளாதாரம் வளருமா? சிங்கப்பூர் வங்கி கணிப்பு!

பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசு நேற்று (நவம்பர் 29) வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி வெறும் 4.5 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியா சந்திக்கும் மிக மோசமான வளர்ச்சியாகும். கடைசியாக 2012-13ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியா 4.3 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தது.

அதுக்கு வாய்ப்பே இல்லை - பொருளாதார வளர்ச்சி குறித்து சி.ரங்கராஜன் கருத்து!

தொடர்ந்து ஆறாவது காலாண்டாக இந்தியா மந்தமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் வேளாண் துறை வளர்ச்சி 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுரங்கத் துறையின் வளர்ச்சி 2.7 சதவீதமாகவும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி 1 சதவீதமாகவும், மின்சாரத் துறையின் வளர்ச்சி 3.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

வளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு!

பொருளாதார மந்தநிலையே இல்லை என்று இத்தனை நாட்களாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை ஒரு சான்றாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்