ஆப்நகரம்

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வு.. இவ்வளவு நாள் சரிய காரணம் என்ன?

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு நவம்பர் 18ல் முடிந்த வாரத்தில் 2 பில்லியன் டாலர் மேல் உயர்ந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 27 Nov 2022, 2:23 pm
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சில வாரங்களாக தொடர்ந்து சரிந்துகொண்டே வந்தது. இந்நிலையில், நவம்பர் 18ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.54 பில்லியன் டாலர் உயர்ந்து 547.25 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil forex


அதற்கு முன், நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 544.71 பில்லியன் டாலராக இருந்தது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல் வாயிலாக தெரிய வருகிறது.

அந்நிய செலாவணி கையிருப்பில் அந்நிய நாணய சொத்துகளே பெரும்பங்கு வகிக்கின்றன. அந்நிய நாணய சொத்துகள் என்பவை அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட், யென் போன்ற வெளிநாட்டு நாணயங்கள் ஆகும்.

நவம்பர் 18ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய நாணய சொத்துகள் 1.76 பில்லியன் டாலர் அதிகரித்து 484.28 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

Paytm: எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல.. ரிசர்வ் வங்கி தடைக்கு பேடிஎம் பதில்!
தொடர் சரிவு

நவம்பர் 18ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரம் மற்றும் அதற்கு முன் நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரம் ஆகிய இரண்டு வாரங்களில் மட்டுமே இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது. அதற்கு முன் சில மாதங்களாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து சரிந்து வந்தது.

காரணம்

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்ததற்கு காரணம் என்ன? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வந்தது. இந்திய ரூபாய் மதிப்பை பாதுகாப்பதற்காக ரிசர்வ் வங்கி குறுக்கிட்டது. இதனால் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்துவிட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரியும்போது, ரிசர்வ் வங்கி தலையிட்டு அமெரிக்க டாலரை விற்பனை செய்கிறது. இதனால் ரூபாய் மதிப்பு சரிவு குறைகிறது. ஆனால் அந்நிய செலாவணி கையிருக்கு குறைந்துவிடும்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்