ஆப்நகரம்

PhonePe பயனர்களுக்கு புதிய வசதி.. இனி வெளிநாடுகளிலும் பணம் அனுப்பலாம்!

முதல்முறையாக சர்வதேச யூபிஐ பரிவர்த்தனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது போன்பே ஆப்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 7 Feb 2023, 5:04 pm
முன்னணி யூபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான போன்பே (PhonePe) தற்போது சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான வசதியையும் தொடங்கியுள்ளது. இதனால் இனி போன்பே ஆப் பயனர்கள் மிக எளிதாக சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
Samayam Tamil phonepe
phonepe


யூபிஐ வசதி பயன்பாட்டில் உள்ள வெளிநாடுகளில் இனி போன்பே பயன்படுத்தி ஈசியாக பணம் செலுத்தலாம். இதற்கு முன் வெளிநாடுகளில் பணம் செலுத்த வேண்டுமெனில் அதற்கு கிரெடிட் கார்டு அல்லது ஃபாரெக்ஸ் கார்டு (Forex card) தேவை.

இனி ஈசியாக போன்பே ஆப் பயன்படுத்தியே வெளிநாடுகளிலும் கூட கடைகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்திவிடலாம். போன்பே வாயிலாக வெளிநாடுகளில் பணம் செலுத்தும்போது, பயனரின் இந்திய வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு செலுத்தப்படும்.

தற்போதைய சூழலில் நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ். மொரீசியஸ், பூட்டான் ஆகிய நாடுகளில் மட்டுமே யூபிஐ பரிவர்த்தனை வசதி பயன்பாட்டில் இருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் பல்வேறு நாடுகளில் யூபிஐ பரிவர்த்தனை வசதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், போன்பே ஆப் முதல்முறையாக வெளிநாடுகளிலும் யூபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்துவதற்கான வசதியை கொண்டுவந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வெளிநாடுகளிலும் யூபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டுமெனில், போன்பே ஆப்பில் சர்வதேச பரிவர்த்தனைகளை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சாரி, “யூபிஐ வசதியை உலகம் பயன்படுத்துவதற்கு இது முதல் படி. இது ஆட்டத்தையே மாற்றி அமைக்கும் எனவும், வெளிநாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களின் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் எனவும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

போன்பே நிறுவனம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்பின் இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகளில் போன்பே ஆப்பிற்கு 50.2% பங்கு இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்