ஆப்நகரம்

இனி சாப்பிடுவது கூட கஷ்டம் போலிருக்கே.. பீதியை கிளப்பும் பணவீக்கம்!

மார்ச் மாதத்தில் இந்தியாவில் பணவீக்கம் 6.95% உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 Apr 2022, 6:45 pm
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. பணவீக்கத்தால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மீதான சுமையும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
Samayam Tamil Retail inflation


இந்நிலையில், மார்ச் மாதத்தில் இந்தியாவில் பணவீக்கம் 6.95% உயர்ந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. இது உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளதை காட்டுகிறது. பிப்ரவரி மாதம் பணவீக்கம் 6.07% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 7.68% உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் உணவுப் பணவீக்கம் 5.85% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் மூன்றாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் வரம்பை தாண்டி பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது ஒரு பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.

வறுத்தெடுக்கும் எண்ணெய் விலை.. இந்திய குடும்பங்கள் எடுத்த முடிவு இதுதான்!
பணவீக்கம் உயர்வு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தில் உணவுப் பணவீக்கத்துக்கு மட்டும் கிட்டத்தட்ட பாதி பங்கு உள்ளது. அண்மையில் உணவுப் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்தது. மேலும் உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், உரம் உள்ளிட்ட பொருட்களின் விநியோகம் தடைபட்டது. இதனால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது.

உலகளவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் பாமாயில். இந்த ஆண்டில் இதுவரை பாமாயில் விலை சுமார் 50% உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அமெரிக்காவில் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த வாரம் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டியை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்