ஆப்நகரம்

Narayana Murthy: இந்தியாவுக்கு இப்போ இதுதான் தேவை.. Infosys நாராயண மூர்த்தி கொடுத்த டிப்ஸ்!

இந்தியாவுக்கு தேவையான கலாச்சாரம் குறித்து இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கருத்துகளை பகிர்ந்துள்ளார்..

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 24 Feb 2023, 4:59 pm
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி இந்திய ஐடி துறையின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்நிலையில், அவர் இந்தியாவின் எதிர்காலத்துக்கான தேவைகள், ஊழியர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Samayam Tamil Narayana Murthy
Narayana Murthy


இந்தியாவுக்கு நேர்மையான, பாரபட்சம் இல்லாத, விரைவில் தீர்மானம் எடுக்கக்கூடிய, விரைவில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடிய கலாச்சாரம் தேவை என நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தால் Asia Economic Dialogue நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் நாராயண மூர்த்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “விரைவில் முடிவுகளை எடுக்கக்கூடிய, விரைவில் அமல்படுத்தக்கூடிய, இடையூறு இல்லாத பரிவர்த்தனைகளை கொண்ட, பரிவர்த்தனைகளில் நேர்மை கொண்ட பாரபட்சம் இல்லாத கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.

எல்லா வளர்ந்த நாடுகளிலும் இந்த கலாச்சார கூறுகள் இருக்கின்றன. இளைஞர்கள் மூன்லைட்டிங் செய்வது, வீட்டில் இருந்து வேலை செய்வது, வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு மட்டும் அலுவலகம் வருவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது வேண்டாம் என்பது எனது விருப்பம்.

1940களில் இந்தியாவும், சீனாவும் பொருளாதார அடிப்படையில் ஒரே அளவில்தான் இருந்தன. ஆனால், இந்தியாவை விட சீனா ஆறு மடங்கு வளர்ந்துவிட்டது. அதற்கு சீனாவின் கலாச்சாரம்தான் காரணம்.

இந்தியாவில் சிறிய பிரிவினர் மட்டுமே கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள் நேர்மையாகவும், தொழில் தர்மத்துடனும், ஒழுக்கத்துடனும் இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலானவர்களிடம் இதெல்லாம் இல்லை.

2006ஆம் ஆண்டில் சீனாவில் ஷாங்காய் நகரில் இன்ஃபோசிஸ் அலுவலகம் தொடங்க விண்ணப்பித்த போது, ஒரே நாளில் 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தந்தார் ஷாங்காய் மேயர். இந்த வேகம் இந்தியாவில் இல்லை.

இந்தியாவில் இன்னும் கீழ்நிலைகளில் ஊழல் இருக்கிறது. தொழிலதிபர்கள் இந்தியாவிலேயே இருந்து தொழில் செய்ய விரும்புகின்றனர். அதற்கு ஏற்ப முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். தேவை இல்லாத தொல்லைகளும், தடைகளும் இருக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்