ஆப்நகரம்

கலிபோர்னியாவில் கைவரிசை காட்டிய இன்ஃபோசிஸ்: ரூ.5.6 கோடி அபராதம்!!

விசா மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு கலிபோர்னியாவில் ரூ.5.6 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Dec 2019, 4:00 pm
இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்நிறுவனம் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் கிளை அமைத்து தொழில்நுட்பச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அங்கு சென்று பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் இன்ஃபோசிஸ் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil கலிபோர்னியாவில் கைவரிசை காட்டிய இன்ஃபோசிஸ்_ ரூ56 கோடி அபராதம்


2006 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கலிபோர்னியாவில் ஹெச்.1பி விசாவுக்குப் பதிலாக பி1 விசா வழங்கியிருக்கிறது. இதன் மூலம் வரி செலுத்துவதிலிருந்து இன்ஃபோசிஸ் தப்பிக்க முயற்சித்துள்ளதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. வேலையின்மை காப்பீடு, வேலைவாய்ப்புப் பயிற்சிக்கான வரிகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக கலிபோர்னியா அடார்னி ஜெனரல் சேவிடர் பெக்கரா கூறியுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஜாக் பால்மர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நல்ல சேதி வருமா?

விசா மோசடி தொடர்பான இக்குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம், 8,00,000 டாலர் செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.5.6 கோடியாகும். மாற்று விசாக்களில் பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்குவதாகவும் இன்ஃபோசிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேற்கூறிய குற்றச்சாட்டுகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் மறுத்துள்ளதோடு, தவறு எதையும் செய்யவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு: வதந்திகளை நம்ப வேண்டாம்!

இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டில் தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக நியூயார்க் நகரத்துக்கு 1 மில்லியன் டாலரை இன்ஃபோசிஸ் நிறுவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்