ஆப்நகரம்

இன்ஃபோசிஸ்: 10,000 பேர் வெளியேற்றம்... ஏன் தெரியுமா?

கொரோனா அச்சத்தால் மைசூருவில் பயிற்சிபெறும் 10,000 இன்ஃபோசிஸ் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Samayam Tamil 18 Mar 2020, 6:18 pm
சீனாவில் உதயமான கொரோனா கொடூரம் உலகம் முழுக்க தனது கிளையைப் பரப்பி விரிந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தியேட்டர், மால் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடக்கூடாது; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை போன்ற அறிவிப்புகள் வெளியாகின.
Samayam Tamil இன்ஃபோசிஸ்_ 10000 பேர் வெளியேற்றம் ஏன் தெரியுமா


தொழில் துறை தரப்பிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைக் கூடுமான வரையில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளன. தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட டிஜிட்டல் சார்ந்த சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடி வேலைபார்க்க அனுமதித்துள்ளன. அந்த வரிசையில், இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தனது நிறுவனத்துக்காகப் பயிற்சிபெறும் 10,000 பேரை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளது.

விமானத்தை நெருங்க முடியாத கொரோனா... இன்னும் எத்தனை நாளைக்கு?

கர்நாடக மாநிலத்தில் மட்டும் இதுவரையில், 13 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த நடவடிக்கையில் துரிதமாக இறங்கியுள்ளது. பயிற்சி பெறுவோர் தங்களது ஊர்களுக்குச் செல்ல கே.எஸ்.ஆர்.டி.சி (கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்து அமைப்பு) உதவுகிறது. இன்ஃபோசிஸ் ஊழியர்கள் இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய ஐந்து சிறப்பு மையங்களை கே.எஸ்.ஆர்.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் இவர்களை ஏற்றிச் செல்லும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் வந்த வேதனை: மால்களின் வருமானம் போச்சு!

மைசூரு ரயில் நிலையத்துக்கும், பெங்களூரு விமான நிலையத்துக்கும்கூட இந்தப் பேருந்துகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்காக இயக்கப்படவுள்ளன. நாள் ஒன்றுக்கு 1,500 பேர் என்ற அளவில் இடம் பெயர்த்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்