ஆப்நகரம்

கோவிட்-19: அடங்காத தனியார் மருத்துவமனைகள் - கதறும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அளவுக்கு மீறி கட்டணம் வசூலிப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.

Samayam Tamil 16 Aug 2020, 12:21 pm

கடந்த சுமார் ஆறு மாதங்களாக கொரோனா கோரதாண்டவம் ஆடிவரும் நிலையில், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, கோவிட்-19 சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எல்லை மீறி கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Samayam Tamil கோவிட்-19 சிகிச்சை


தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்த சில மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

இனி வங்கிக்கும் போகத் தேவையில்லை - மினிமம் பேலன்ஸும் வேண்டாம்!

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 சிகிச்சைக்கு மிக அதிக கட்டணம் வசூலிப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன. இதுகுறித்து காப்பீட்டு நிறுவனங்களின் சங்கமான ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் தலைவர் எம்.என்.சர்மா பேசியபோது, “மருத்துவமனைகள் செயற்கையாக கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்துகின்றன.

காப்பீட்டு நிறுவனங்களால் இதை கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில், நாங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு. நாங்கள் கொடுக்கும் ஒவ்வொரு இன்சூரன்ஸ் பாலிசிக்கும் கட்டணத்தை காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆகையால், எங்களால் நியாயமற்ற முறையில் பாலிசிக்கு கட்டணம் நிர்ணயிக்க முடியாது. எனினும், மருத்துவமனைகள் அளவுக்கு அதிகமகா கட்டணம் வசூலிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 சிகிச்சைக்கு மத்திய அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென காப்பீட்டு நிறுவனங்கள் கங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்