ஆப்நகரம்

இனி இன்சூரன்ஸ் பணம் சீக்கிரம் கிடைக்கும்... அரசு உத்தரவு!

காப்பீட்டுத் திட்டங்களுக்கான கிளைம் தொகையை விரைந்து வழங்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 7 Jun 2021, 8:10 pm
கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் கடினமான சூழல் நிலவுகிறது. உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்கள் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சுழலில் மருத்துவத் தேவைகளுக்கும் மற்ற காரணங்களுக்காகவும் காப்பீட்டுப் பணத்தை அதிகமாக நம்பியுள்ளனர். ஆனால் காப்பீட்டுத் தொகை கிடைப்பதில் கால தாமதம் ஆவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதற்குத் தீர்வு காண மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
Samayam Tamil insurance


காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டங்களுக்கான கோரிக்கைத் தொகையை விரைந்து வழங்கும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா ஆகிய இரண்டு காப்பீட்டுத் திட்டங்களுக்கான கிளைம் தொகையை 7 நாட்களுக்குள் பரிசீலித்து வழங்கும்படி காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காப்பீட்டு நிறுவனங்கள் 30 நாட்கள் வரை எடுத்துக்கொண்டன.

எல்லாருக்கும் சம்பளம் மாறப் போகுது... அதுல நல்ல விஷயமும் இருக்கு!

காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் கிளைம் செட்டில்மெண்ட் பணியில் இருதரப்பு டிஜிட்டல் மயமாக்கத்தில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது காகித ஆவணங்களுக்குப் பதிலாக மொபைல் ஆப் போன்ற டிஜிட்டல் முறையில் கிளைம் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை விரைந்து கிடைக்கிறது. இந்த கொரோனா சமயத்தில் இது மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்