ஆப்நகரம்

ICF: சென்னையில் 3,000 ரயில் பெட்டிகள் உற்பத்தி!

215 நாட்களில் 3,000 ரயில் பெட்டிகளைத் தயாரித்து சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான பெட்டிகளைத் தயாரிப்பதில் ஐசிஎஃப் மும்முரமாக உள்ளது.

Samayam Tamil 21 Dec 2019, 6:35 pm
மத்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டின்கீழ் சென்னையில் இயங்கி வரும் ஐசிஎஃப் தொழிற்சாலையில், உள்நாட்டுத் தேவைக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து ஐசிஎஃப் இயங்கி வருகிறது. மேலும், குறைந்த வேலைநாட்களில் அதிக ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் முனைப்பில் ஐசிஎஃப் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 2019-20 நிதியாண்டு நிறைவுபெற இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்குள் 3,000 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்து ஐஃபிஎஃப் சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil ICF_ சென்னையில் 3000 ரயில் பெட்டிகள் உற்பத்தி


3,000 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க 215 வேலைநாட்களே ஆகியுள்ளன. 88 நாட்களில் 1,000 ரயில் பெட்டிகளும், 149 நாட்களில் 2,000 ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. 2018-19ஆம் ஆண்டில் 3,000 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க மொத்தம் 289 நாட்கள் ஆனது. அந்த ஆண்டில் 112 நாட்களில் 1,000 பெட்டிகளும், 202 நாட்களில் 2,000 பெட்டிகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. 2011-12ஆம் ஆண்டில் 1,000 பெட்டிகளைத் தயாரிக்க 216 நாட்கள் ஆனது.

ஜவுளி ஏற்றுமதியாளர்களைக் கசக்கிப் பிழியும் மத்திய அரசு!

டிரெயின் 18 ரயிலுக்கான பெட்டிகளைத் தயாரிக்க ஐசிஎஃப் நிறுவனத்துக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டில் 160 பெட்டிகளும், 2020-21 நிதியாண்டில் 240 பெட்டிகளும், 2021-22 நிதியாண்டில் 240 பெட்டிகளும் தயாரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இப்பெட்டிகளை உற்பத்தி செய்ய ரூ.4,300 கோடி வரையில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் டிரெயின் 18 ரயில்கள் தற்போது டெல்லி - வாரணாசி, டெல்லி - ஸ்ரீமதா வைஷ்னோ தேவி கத்ரா ஆகிய வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இந்த ரயில் முழுவதும் ஐசிஎஃப் தொழிற்சாலையால்தான் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்