ஆப்நகரம்

பெற்றோர்களே.. சுகன்யா சம்ரித்தியில் ரூ.10,000 போட்டு.. 52 லட்சம் வரை பெறலாம்!

சுகன்யா சம்ரித்தி திட்டம் மூலம் முதலீடு செய்து 52 லட்சம் வரை கார்பஸ் தொகை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாகக் காணலாம்.

Samayam Tamil 22 May 2023, 2:27 pm
பெண் குழந்தைகளுக்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் மிகவும் பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டுப் திட்டங்களில் ஒன்றாகும். இதுஅரசு ஆதரவு பெற்ற சிறுசேமிப்புத் திட்டம், தங்கள் பெண் குழந்தையின் நீண்ட கால நிதித் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிக்க பெற்றோருக்கு உதவியாக இருக்கும்.
Samayam Tamil sukanya samridhi


நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்கு 14 வயது வரை முதலீடு செய்ய முடியும். அதனைத் தொடர்ந்து பெண் குழந்தைக்கு 18 வயது ஆனவுடன் 50 சதவீத முதிர்வுத் தொகையையும், பெண்ணுக்கு 21 வயதாகும் போது முழு முதிர்வுத் தொகையையும் அவர்கள் திரும்பப் பெற முடியும்.

ஒரு நபர் தனது பெண் குழந்தை பிறந்த உடனேயே SSY கணக்கில் முதலீடு செய்யத் தொடங்கினால், பயனாளியான பெண் குழந்தைக்கு 14 வயது வரை இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளரை அனுமதிப்பதால், 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையைப் பெற முடியும். ஒரு முதலீட்டாளர் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்/அவள் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்தை 12 சம தவணைகளில் முதலீடு செய்ய முடியும்.

முதலீட்டாளர் தனது பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு முதிர்வுத் தொகையில் 50 சதவீதத்தை திரும்பப் பெறத் தேர்வு செய்யவில்லை என்றால், குழந்தைக்கு 21 வயது ஆனவுடன், அவர் முழு முதிர்வுத் தொகையான ரூ.52,74,457ஐப் பெற முடியும்.

முழு காலகட்டத்திற்கான வட்டி விகிதத்தை 7.6 சதவீதமாகக் வைத்துக் கொண்டால் இந்தத் தொகை பெற முடியும்.

வருமான வரிச் சலுகை!

மேலே குறிப்பிட்டுள்ளபடி, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஒரு முதலீட்டாளர் ஒரு நிதியாண்டில் SSY கணக்கில் முதலீடு செய்த ரூ.1.50 லட்சம் வரை வருமான வரிச் சலுகையைப் பெறலாம். ஈட்டிய SSY வட்டி மற்றும் SSY முதிர்வுத் தொகைக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும். எனவே, சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு EEE முதலீட்டு கருவியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்