ஆப்நகரம்

Mutual Fund: குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய விதிமுறைகள் மாற்றம்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய ஜூன் 15ஆம் தேதி முதல் புதிய விதிமுறை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 1 Jun 2023, 6:05 pm
குழந்தைகள் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை செபி திருத்தியுள்ளது.
Samayam Tamil children investment
children investment


எதிர்கால பாதுகாப்புக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது பரவலாகியுள்ளது. அதேபோல குழந்தைகளின் பெயரிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. பொதுவாக குழந்தைகள் அல்லது வயது வராத சிறுவர்கள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.

இந்நிலையில், குழந்தைகள்/சிறுவர்கள் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை செபி திருத்தியுள்ளது. இதுகுறித்து கடந்த மே 12ஆம் தேதி செபி ஒரு சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளது.

பழைய விதிமுறை

இதுவரையில் குழந்தைகள்/சிறுவர்கள் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமெனில், குழந்தையுடன் சேர்ந்து வங்கியில் கூட்டு கணக்கு (Joint account) தொடங்கி அதன் வாயிலாக மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

புதிய விதிமுறை


இனி குழந்தைகள்/சிறுவர்கள் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமெனில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தங்களது வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவே முதலீடு செய்யலாம். அதேபோல குழந்தை/சிறுவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் கூட்டு கணக்கு வாயிலாகவும் வழக்கம் போல முதலீடு செய்யலாம்.

பணத்தை எடுக்கும்போது

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் உள்ள பணத்தை வெளியே எடுக்கும்போது (Redemption) குழந்தை அல்லது சிறுவரின் வங்கி கணக்குக்கு மட்டுமே பணம் செலுத்தப்படும் என செபி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெற்றோர் தங்களது வங்கி கணக்கில் இருந்து நேரடியாக முதலீடு செய்தாலும் கூட, பணத்தை வெளியே எடுக்கும்போது குழந்தை/சிறுவர் வங்கி கணக்குக்கு மட்டுமே பணம் செலுத்தப்படும்.

எப்போது அமலாகிறது?


இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்