ஆப்நகரம்

ரயில் பயணிகளுக்கு நிம்மதி.. இனி ரீஃபண்ட் பணம் கட்டாயம் கிடைக்கும்!

டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறையை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது.

Samayam Tamil 24 Mar 2022, 12:57 pm
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். எனவே ரயில்வே தொடர்பான அப்டேட்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது. பல நேரங்களில் அவசரநிலை காரணமாக ரயில் சார்ட் தயாரித்த பிறகும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு டிக்கெட்டை ரத்து செய்ததற்கான பணம் கிடைக்காமல் போதும். இது நிறையப் பேருக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.
Samayam Tamil irctc


இந்நிலையில் ரீஃபண்ட் விஷயத்தில் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு ரத்து செய்தாலும் இனி ரிஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறலாம். இதுகுறித்து IRCTC தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில் இந்திய ரயில்வேயில் பயணம் செய்யாமலோ அல்லது பகுதியளவு பயணம் செய்யாமலோ டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளது. இதற்கு ரயில்வே விதிகளின்படி டிக்கெட் டெபாசிட் ரசீதை (டிடிஆர்) நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதைச் செய்வதற்கு முதலில் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctc.co.in முகவரிக்குச் செல்லவும்.

இப்போது முகப்புப் பக்கத்திற்குச் சென்று ’My account' என்பதைக் கிளிக் செய்யவும்

அடுத்ததாக, கீழ்தோன்றும் மெனுவிற்குச் சென்று, ’My transaction' என்பதைக் கிளிக் செய்யவும்.

இங்கே நீங்கள் TDR ஆப்சனை பார்க்கலாம். யாருடைய பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் பார்க்கலாம்.

இப்போது உங்கள் PNR நம்பர், ரயில் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை நிரப்பி, கேன்சல் விதிகளின் பாக்ஸில் டிக் செய்து ‘submit’ கொடுக்க வேண்டும்.

இதற்குப் பிறகு, மொபைல் எண்ணுக்கு OTP அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

PNR விவரங்களைச் சரிபார்த்து, டிக்கெட்டை சேன்சல் செய்யும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும். அங்கேயே ரீஃபண்ட் தொகை எவ்வளவு என்பதை நீங்கள் காண்பீர்கள்.

இதுகுறித்த தகவலும் மொபைல் நம்பருக்கு SMS மூலமாக அனுப்பப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்