ஆப்நகரம்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. டிக்கெட் இல்லாமலேயே பயணிக்கலாம்!!

புக்கிங் செய்ய தேவையில்லை!

Samayam Tamil 18 Apr 2022, 3:01 pm
டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே நீங்கள் ரயிலில் பயணம் செய்ய முடியும். அதற்கான விதிமுறை உள்ளது. அது எப்படி என்று இங்கே பாருங்கள்.
Samayam Tamil irctc important update you can travel in train without ticket booking by this rule
ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. டிக்கெட் இல்லாமலேயே பயணிக்கலாம்!!


ரயில் பயணம்!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கான முக்கியமான செய்திதான் இது. பல சமயங்களில் திடீரென்று பயணம் செய்ய நேரிடும் போது இப்படி ஒரு நிலை உங்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆனால் உடனடியாக ரயிலில் போக வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் முன்பதிவு செய்யாமலேயே பயணம் செய்யலாம்.

பிளாட்பார்ம் டிக்கெட்!

நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. ஆனால் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், பிளாட்பார்ம் டிக்கெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறலாம். இதற்குப் பிறகு, நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று டிக்கெட்டைப் பெறலாம். அப்படி ஒரு விதிமுறை இந்திய ரயில்வேயில் உள்ளது. ஆனால் இதைச் செய்ய நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து உடனடியாக செக்கிங் அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரை உங்களுக்கு ஒரு டிக்கெட் தரப்படும்.

சீட் கிடைக்குமா?

சில நேரங்களில் ரயிலில் இருக்கை காலியாக இருக்காது. அப்போது, செக்கிங் அதிகாரி உங்களுக்கு சீட் கொடுக்க மறுக்கலாம். ஆனால், உங்களுடைய பயணத்தை நிறுத்த முடியாது. ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யவில்லை என்றால், நீங்கள் ரூ.250 அபராதத்துடன் சேர்த்து, பயணத்தின் மொத்தக் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட்டைப் பெற வேண்டும். சாமானியர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே இதுபோன்ற பல விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. எனவே நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி ரயிலில் பயணிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்