ஆப்நகரம்

IRCTC Update: ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இதப் பண்ண போதும்.. சாப்பாடு உங்களைத் தேடி வரும்!

ரயிலில் இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்யும் எளிய வழிகள்.

Samayam Tamil 12 Aug 2022, 2:35 pm
ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்வது சில நேரங்களில் பயணிகளுக்கு சலிப்பு தட்டும் ஒன்றாக இருக்கும். இன்னும் சிலருக்கு வேலை நிமித்தமாக உடனடியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
Samayam Tamil IRCTC food


அந்தச் சமயங்களில் ரயிலில் பயணம் செய்யும்போது பசியைச் சமாளிக்க அடுத்த ஸ்டேஷன் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் அந்த ரயில் கிளம்புவதற்குமுன் உணவௌ வாங்கி வருவது சில நேரங்களில் தவறான முடிவாகக் கூட இருக்கும்.

எனவே, உங்கள் உணவு உட்பட அனைத்து வேலைகளையும் சுலபமாக்கும் விதத்தில் IRCTC ஆப்ஸ் மற்றும் இணையதளத்திலிருந்து ஆன்லைனில் உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போல, உங்கள் பெர்த் அல்லது இருக்கையில் ரயில் பயணத்திற்கான உணவை ஆர்டர் செய்வது எளிமையாக்கியுள்ளது.

IRCTC தனது புதிய eCatering செயலியை இரயில்களில் உணவு விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது Google Play Store மற்றும் Apple store இல் கிடைக்கிறது. அந்த ஆப் ஐ முதலில் டவுன்லோட் செய்து Install செய்து வைக்கவும்.

ரயிலில் இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்ய உதவும் 5 எளிய வழிமுறைகள்:

1. முதலில் https://ecatering.irctc.co.in/ என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.

2. அடுத்து உங்கள் ரயிலின் பெயர் அல்லது ரயில் நிலைய எண்ணை டைப் செய்யவும்.

3. மேலும் உங்கள் PNR எண்ணை உள்ளிட்டு உங்கள் பயணத்திற்கான உணவகங்களை ஆராயுங்கள்.

4. பின் உங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டட் செய்து ஆன்லைனிலும் பணம் செலுத்தலாம் அல்லது உணவைப் பெறும்போதும் பணத்தைச் செலுத்தும் ஆஃப்சனை தேர்வு செய்யவும்.

5. இறுதியில் நீங்கள் குறித்த நேரத்தில் உங்கள் உணவானது உங்களிடம் டெலிவரி செய்யப்படும்.

ரயிலில் உணவுப் பெட்டி டெலிவரி செய்யப்படும் சில முக்கிய ரயில் நிலையங்களாக மும்பை சென்ட்ரல் (பிசிடி), சத்ரபதி சிவாஜி டெர்மினல் (சிஎஸ்டி), புது தில்லி ரயில் நிலையம் (என்டிஎல்எஸ்), பழைய டெல்லி ரயில் நிலையம் (டிஇஎல்), பெங்களூர் சிட்டி ஜங்ஷன் (எஸ்பிசி) கிடைக்கும்

மேலும் IRCTC சென்னை சென்ட்ரல் (MAS), கான்பூர் (CNB), அலகாபாத் சந்திப்பு (ALD), வாரணாசி (BSB), லக்னோ (LKO), இடார்சி (ET), போபால் சந்திப்பு (BPL), விஜயவாடா (BZA) போன்ற இடங்களில் இதை விரிவுபடுத்துவதில் முனைப்பாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்