ஆப்நகரம்

தனி நபா் வருமான வாி உச்சவரம்பை உயா்த்துகிறதா மத்திய அரசு?

தனிநபா் வாி செலுத்துவதற்கான வருவாய் உச்ச வரம்பை உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 8 Jan 2018, 2:44 pm
தனிநபா் வாி செலுத்துவதற்கான வருவாய் உச்ச வரம்பை உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil is central government lifting the ceiling of income tax
தனி நபா் வருமான வாி உச்சவரம்பை உயா்த்துகிறதா மத்திய அரசு?


வருகிற 2019ம் ஆண்டு மக்களவை தோ்தல் நடைபெற உள்ளதால் நடுத்தர மக்களை கவரும் வகையில் மத்திய அரசு ஒருசில சுவாரசிய திட்டங்களை மத்திய அரசு தயாாித்து வருகிறது. அந்த வகையில் தனிநபா் வரி செலுத்துவதற்கான வருமான உச்சவரம்பை உயா்த்த முடிவு செய்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறக்கூடிய நபா்களுக்கு வாி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. வாி செலுத்துவதற்கான உச்சவரம்பு மேலும் உயா்த்தப்படும் என்ற மத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி ஏற்கனவே அறிவித்திருந்தாா்.

மேலும் படிவம் 80 சி யின் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, வங்கி வைப்பு நிதி போன்ற முதலீடுகளின் மூலம் மேலும் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு வரி சேமிப்பு வழங்கப்படுகிறது. இந்த இருவரம்பிலும் மாற்றங்களை மேற்கொண்டு நடுத்தர வர்க்கத்தினரை கவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்