ஆப்நகரம்

சும்மா கிடைக்கும் 30,000 ரூபாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசிடமிருந்து பொதுமக்களுக்கு 30,000 ரூபாய்க்கு மேல் பணம் தருவதாக பரவும் தகவல் உண்மையா?

Samayam Tamil 9 May 2022, 1:14 pm
பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளோடு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி போன்ற திட்டங்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
Samayam Tamil fact check


இதுபோன்ற நிறைய திட்டங்கள் அமலில் இருக்கும் சூழலில், பொதுமக்களுக்கு நிதியமைச்சகம் சார்பாக 30,628 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக செய்தி ஒன்று பரவிக்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்குமாறு லிங்க் ஒன்றும் பரப்பப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்ற சந்தேகம் நிறையப் பேருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.

PIB சார்பாக இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பில் இதுவொரு போலியான தகவல் என்று தெரியவந்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் அப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க 'https://bit.ly/3P7CiPY' என்ற லிங்க்கை கிளிக் செய்யுமாறு வரும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும், அந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் PIB கேட்டுக் கொண்டுள்ளது.

இதுபோன்ற போலியான செய்திகள் பரவினால் அதை எப்படி கண்டுபிடிப்பது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் இதுபோன்ற நம்பகத்தன்மை அற்ற செய்திகளைப் பார்த்தால் அதை https://factcheck.pib.gov.in. என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது +918799711259 என்ற நம்பருக்கு வாட்ஸ் ஆப் செய்யலாம். pibfactcheck@gmail.com. என்ற ஈமெயில் ஐடியும் உள்ளது.

பணக்காரன் யார் தெரியுமா? வாரன் பஃபெட் பதில் இதுதான்!!

இந்தியாவில் இப்போது ஆன்லைன் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் நிறைய பணத்தையும் இழந்துள்ளனர். SMS மூலமாக போலியான செய்திகள் அனுப்பப்பட்டு அந்த லிங்க்கை கிளிக் செய்யுமாறு ஏமாற்றுவார்கள். எனவே வாடிக்கையாளர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்