ஆப்நகரம்

பணத்தை ஒழுங்கா சேமிக்கணுமா? உங்களுக்கு சில நச் டிப்ஸ்!

பணத்தை தேவையின்றி செலவழிக்காமல் முறையாக சேமிக்க சில வழிமுறைகள்.

Samayam Tamil 6 Feb 2022, 5:57 pm
சேமிப்பு என்பது அனைவருக்குமே மிக முக்கியமானது. உலகம் முழுவதும் பொருளாதார வல்லுநர்கள் சேமிப்பை ஊக்குவிக்கின்றனர். பணத்தை வீணடிக்காமல் சேமிப்பதன் மூலம் அத்தியாவசிய காலங்களில் நெருக்கடியை தவிர்க்கலாம்.
Samayam Tamil savings


பணத்தை சேமிக்க ஆசை இருக்கிறது, ஆனால் எப்படி தொடங்குவது என தெரியவில்லையா? சேமிப்பு என்பது ஒரே நாளில் வருவதில்லை. மாறாக அது ஒரு பழக்கமாக மாற வேண்டும். பணத்தை சேமிக்க தொடங்குவதற்கு சில வழிகளை பார்க்கலாம்.

வரவுக்குள் செலவு

வருமானத்தை மீறி செலவு செய்வது சேமிப்புக்கு மிகப்பெரிய எதிரி. ஆகவே, வருமானத்துக்குள் செலவு செய்து, தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் சேமிப்புக்கான முதல் படியை எடுத்து வைக்கலாம்.

வட்டி விகிதம் உயருகிறதா? ரிசர்வ் வங்கி எடுக்கும் முக்கிய முடிவு!
கிரெடிட் கார்டு செலவு

கையில் கிரெடிட் கார்டு இருக்கிறது என்பதற்காகவே இஷ்டத்துக்கு செலவு செய்தால் சேமிப்பை மறந்துவிட வேண்டியதான். எனவே, கிரெடிட் கார்டை அத்தியாவசியத்துக்கு மட்டும், குறைவாக செலவிட்டு, சரியான நேரத்தில் கிரெடிட் கார்டு கட்டணங்களை செலுத்திவிட வேண்டும்.

முதலீடு

பணத்தை சேமித்துக்கொண்டே வரும்போது அதில் ஒரு பகுதியை முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில், பணம் மேன்மேலும் வளர வேண்டும். உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பணத்தை முதலீடு செய்துகொள்ளலாம்.

செலவுகளை கண்காணித்தல்

மனம் போன போக்கிற்கு செலவு செய்தல் அபாயம். குறைந்த செலவாக இருந்தாலும், அதிக செலவாக இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் உங்களின் செலவை கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பணம் எங்கு வீணாகிறது என்பதை குறிவைத்து கண்டுபிடிக்க முடியும்.

தேவையில்லாத கடன்கள்

சில நேரங்களில் கடன்கள் அத்தியாவசியமாக இருக்கலாம். வீட்டுக் கடன் போன்றவை இதற்கு சிறந்த உதாரணம். ஆனால், கடன் வாங்க வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாத கடன்களை வாங்கி சிக்கிக்கொள்ளக்கூடாது. உதாரணமாக, தேவையில்லாத செலவுகளுக்கு தனிநபர் கடன் (Personal loan) வாங்குவது ஆபத்து. ஏனெனில், தனிநபர் கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படும். எனவே, பணத்தை சேமிக்க தேவையில்லா கடன்களை ஒழிக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்